தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 1282 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக்கல்வித்துறை சற்று முன் உத்தரவிட்டுள்ளது. 2011-12 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1282 பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர்.

இந்த தற்காலிக பணிக்கான தொடர் நீட்டிப்பு காலம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்காலிக ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.