
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குற்றாலத்தில் இருக்கும் கடைகளில் சிப்ஸ், அல்வா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றாலம் பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது தரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட 2000 கிலோ அல்வாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தார். மேலும் சுத்தமற்ற எண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட 1000 கிலோ சிப்ஸ், அல்வா தயார் செய்வதற்காக எடுத்து வைக்கப்பட்ட 1400 லிட்டர் மைதா பால் ஆகியவை மண்ணில் கொட்டி அழிக்கப்பட்டது.