கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன காவலர் ஜோயல் வேட்டை தடுப்பு காவலர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் ராட்சத ஆமையை பார்வையிட்டுள்ளனர்.

இதனையடுத்து ஆமையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது, இறந்து கிடந்த ஆமை 50 கிலோ எடை உடையதாக இருக்கிறது. கப்பலில் அடிபட்டு ஆமை இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.