ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்புதூர் மற்றும் வாய்க்கால் செட் பகுதியில் 15 ஆடுகளையும், 35 கோழிகளையும் மர்ம விலங்கு வேட்டையாடியதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். நேற்று காலை கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம விலங்கு நடமாடும் காட்சிகள் பதிவாகியது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பார்ப்பதற்கு அந்த விலங்கு நாய் போலவே இருக்கிறது. ஆனால் அது நாய் இல்லை. அது என்ன விலங்கு என்பது தொடர்ந்து கண்காணித்த பிறகு தான் தெரியவரும். எனவே விவசாயிகள் பட்டியலில் இருக்கும் ஆடு மற்றும் கோழிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.