
கர்நாடகா காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், சிருங்கேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ- வுமான பெகனே ராமைய்யா(90) காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குண்டுராவ் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் தலைவர் அமைச்சராக இருந்துள்ளார்.
இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ராமைய்யா மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஒரு வரமாக தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.