
கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தில் ரமேஷ், லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லட்சுமியிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் தங்க தாலிக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 2 பவுன் தங்கத் தாலியை வாங்கியுள்ளார். பின்னர் அந்த நகையை உருக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வடமாநில இளைஞர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இளைஞர்களை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் பீகார் மாநிலம் மத்திய புறா மாவட்டம் பங்கன் ஊர் கிராமத்தைச் சேர்ந்த சந்தனகுமார்(24), சோனாகுமார்(28) என்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் வேறு எங்கேயாவது இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.