
மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதன்படி குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவில் 7500 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள் குறித்து https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCG LEO3042023.pdf என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி மே 3. அதன் பிறகு ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 5 ஆகும். இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக் குறிப்புகள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தினை தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
