
ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் என்னும் பகுதிக்கு தனது நண்பர் பிரேமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தினேஷ் சேர்தமங்கலம் நோக்கி தனது நண்பர் ரஞ்சித் உடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆலம்பாக்கம் சாலையில் 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வெற்றிவேல், தினேஷ் சம்பவ இடத்திலேலயே உயிரிழந்தனர். அவர்களுடன் பயணித்த நண்பர்களான ரஞ்சித் மற்றும் பிரேம் படுகாயமடைந்தனர்.
இந்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் உயிரிழந்த வாலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே பிரேம் என்பவர் உயிரிழந்த நிலையில் ரஞ்சித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.