
தமிழில் மட்டுமே இனி அரசாணைகள் வெளியீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசு துறைகளும், தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் தங்களின் கையெழுத்துகளையும் தமிழில் மட்டுமே இட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.