அனைத்து உலக பெண்கள் தினம் மார்ச் 8ஆம் தேதி இன்று உலகம் எங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய ரயில்வே துறை பெண் பாதுகாப்பு கருதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. RPF  ரயில்வே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் பணியாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க பெப்பர் ஸ்பிரே கேன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் அல்லது ரயில்களில் தனியாக குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் பாதுகாப்பு பணியாளர்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே கேன்கள் வழங்குவதால் பாதுகாப்பு பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். மேலும் மிகவும் அச்சுறுத்தலான சூழ்நிலைகள் மற்றும் அவசரகால நிலையில் இதன் மூலம் அந்த சூழ்நிலையை திறம்பட கையாள முடியும் என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.