பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி எதிரணி வீரர்களுடன் போட்டியிடு,  ஆக்ரோஷமாக நடந்து கொள்வது அவருடைய சிறந்ததை வெளிக்கொண்டு வருவதாக ஒரு முறை கூறியிருந்தார். அதேபோன்ற அணுகுமுறை கொண்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர். கோலியை போல இவரும் ஆக்ரோஷமான அணுகுமுறையை வெளிப்படுத்தக் கூடியவர். இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டியில் விராட் கோலிக்கும், கௌதம் கம்பீர் இடையே மோதல் ஏற்பட்டது. இவர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலிக்கும் இடையே பிசிசிஐ நேர்காணல் ஒன்றை நடத்தியது.

அப்போது பேசிய விராட் கோலி எங்கள் இருவருக்கும் இடையான மசாலா நிகழ்வுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வீடியோ இது என குறிப்பிட்டார். இதனை அடுத்து நேர்காணலில் கௌதம் கம்பீரிடம் நீங்கள் பேட்டிங் செய்யும்போது எதிரணி வீரர்களிடம் பேசிக்கொள்வதால் அது உங்களுடைய கவனத்தை விட்டு வெளியே சென்று அவுட் ஆகி விடுவீர்கள் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா அல்லது அது உங்களை அதிக ஆக்கிரோஷத்திற்கு உள்ளாக்குமா என விராட் கோலி கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிரித்தபடி பதில் அளித்த கௌதம் கம்பீர் என்னை விட நீங்கள் தான் அதிகப்படியான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் இந்த கேள்விக்கு என்னை விட உங்களால் தான் சிறந்த பதில் அளிக்க முடியும் என கலாய்த்தபடி கூறினார். இதை கேட்டு விராட் கோலியின் விழுந்து விழுந்து சிரித்தார். இதற்குப் பின் அந்த கேள்விக்கு பதில் அளித்த விராட் கோலி நான் சொல்வதை ஒத்துக்கொள்ளும் ஒருவரை தான் நான் தேடுகிறேன், அதை தவறு என்றும் சொல்ல மாட்டேன் களத்தில் அப்படித்தான் நடக்கும் என கூறினார்.