
தமிழ்நாடு அரசு விரைவில் நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. இதை முன்னிட்டு பாமக கட்சி பொது நிழல் நிதி அறிக்கை மற்றும் வேளாண் நிழல் நிதி அறிக்கை ஆகியவற்றை வெளியிடுகிறது. அந்தவகையில் சமீபத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதி அறிக்கையை பாமக கட்சி தாக்கல் செய்த நிலையில் தற்போது பொது நிழல் நிதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த பொது நிழல் நிதி அறிக்கையை அன்புமணி ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழ்நாட்டை போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு துறைகள் மூலம் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு மாதம் 2000 ரூபாய் நிதி வழங்கப்படும். 5 வருடத்திற்குள் ஒரு லட்சம் கோடியில் நீர் பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.