
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி தர மறுத்ததால் காதலனை பிரேக் அப் செய்த காதலிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் நாதியா மாவட்டத்தை சேர்ந்த சுமன் சிக்தார் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நேரத்தில் சுமன் தனக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கித் தரவில்லை என்று கூறி அந்தப் பெண் சுமனிடம் பிரேக் அப் தெரிவித்தார். இதனால் மனமுடைந்த சுமன் அந்தப் பெண்ணை பழிவாங்கும் நோக்கத்தில் வித்தியாசமான முறையை மேற்கொண்டார். அதற்காக நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை தினமும் ஆன்லைனில் விலைமிக்க பொருட்கள், மொபைல்கள், லேப்டாப்புகள் போன்ற பொருட்களை பெண்ணின் வீட்டு முகவரிக்கு “கேஷ் ஆன் டெலிவரி” யில் அனுப்பி வைத்தார்.
கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட பொருள்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு டெலிவரிக்காக சென்ற நிலையில் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனதளங்கள் அவர்கள் இருவரையும் பிளாக் செய்தனர். பின்னர் இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் சுமனை கைது செய்தனர் .
பின்னர் அவரிடம் விசாரணையில் தன் காதலி விலை உயர்ந்த பரிசுக்காக தன்னை பிரேக்அப் செய்ததால் அவரை பழிவாங்கும் நோக்கத்தில் இப்படி செய்ததாக கூறினார். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.