அரியானா மாநிலத்தில் பாஜக சார்பில் முதல் மந்திரியாக நயாப் சிங் சைனி பதவி வகித்துள்ளார். இதற்கிடையில் அந்த மாநிலத்தில் வருகிற 1-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் முதல் மந்திரி மற்றும் மாநில பாஜக தலைவர் ஆகியோர் நேற்று ஜிந்த் கிராமத்தில் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். அப்போது மாட்டு வண்டியை ஓட்டி வந்த பெண்ணிடம் முதல் மந்திரி கிராமத்தில் நடைபெறும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்து பேசினார். முதல் மந்திரியின் பாதுகாப்பிற்காக வந்த பாதுகாவலர்களும் மாட்டுவண்டி உடன் நடந்து சென்றனர்.  இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.