
சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடத்திற்கு இந்திய பசுமைக் கட்டட கவுன்சில் சார்பில் தங்கத் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை, மாண்புமிகு அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம் கவுன்சிலின் தலைவர் அஜித் குமார் ஜோர்டியா வழங்கினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக, ஒரு அரசு மருத்துவமனைக்கு இந்த தரச்சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சான்றிதழ், மருத்துவமனை கட்டடம் பசுமை நட்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. சூரிய சக்தி, மழைநீர் சேகரிப்பு போன்ற பசுமை தொழில்நுட்பங்கள் இந்த மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சான்றிதழ், தமிழக அரசின் பசுமை கட்டடங்கள் மற்றும் நிலைபேறான வளர்ச்சி குறித்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.