தமிழ்நாட்டு அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை குறித்து பார்க்கலாம். அதாவது இந்த திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து முடித்து உயர்கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் உட்பட அனைத்தும் உதவி தொகையாக வழங்கப்படுகிறது.

மேலும் இந்தத் திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதே போன்று விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் மிகாமலும், குடும்பத்தில் எந்த டிப்ளமோ பட்டதாரியும் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.