
மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தமிழக அரசும் பணிக்கொடையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பணிக்கொடையானது 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கிறது.
இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இருப்பவர்கள் ஓய்வு பெரும்போது அவர்களுக்கு பணிக்கொடையானது வழங்கப்படும். இந்த தொகை மத்திய அரசின் ஊழியர்களுக்கு 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழக அரசும் 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய அரசாணை கடந்த ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.