தமிழகத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளியில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதத்தின் 2வது வாரத்தில் பள்ளிகளில் கல்வி சார்ந்த திரைப்படங்களை திரையிட வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு வகையான கலாச்சார தனித்தன்மை, வாழ்க்கை சூழல், நட்பு பாராட்ட, குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவத்தை அறிந்து கொள்ள, மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரவும் இத்திரைப்படம் வழி வகுக்கும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமின்றி திரை துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கதை எழுதுதல், பாடல் எழுதுதல், நடிப்பு, தயாரிப்பு, கேமரா, எடிட்டிங் முதலிய தொழில் நுட்பங்களை வளர்ப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

இந்த திரைப்படங்களை திரையிடும் முறை என்னவென்றால்,

*முன்கூட்டிய மாதத்தின் முதல் வாரத்தில் EMIS தளத்திலிருந்து தலைமை ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும்.

*இதற்கு என்று ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

*EMIS தளத்திலிருந்து மட்டுமே திரைப்படங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின் அதனை DVD  அல்லது PENDRIVE போன்றவற்றில் சேமித்து வைத்த பின்பு, LAPTOP அல்லது TV/ PROJECTOR மூலம் மாணவர்களுக்கு திரையிட வேண்டும்.

*இதை மாணவர்களுக்கு திரையிடவதற்கு முன்பே, தலைமை ஆசிரியர் மற்றும் பொறுப்பாசிரியர் அந்த திரைப்படத்தை பார்த்து, படத்தின் தலைப்பை பள்ளி வளாகத்தின் சுவரொட்டியில் ஒட்டி வைக்க வேண்டும்.

*திரைப்படங்களைப் பற்றி கூற ஆர்வமுள்ள துறை சார்ந்த வல்லுநரை சிறப்பு விருந்தினராக அழைத்து உரையாற்ற செய்யலாம்.