தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்க் 28ஆம் தேதி தொடங்கியது. இந்த பொது தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் பொது தேர்வு மார்க் வெளியீடு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாவில் 4-வது கேள்விக்கு விடை அளித்திருந்தாலே 1 மார்க் வழங்க தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. ஜோதியா பூலே தொடர்பான கேள்விக்கான வாக்கியங்கள் முரணாக இருப்பதால் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.