
ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்காக 3ம் தரப்பு ஆப்களை பயன்படுத்துகின்றீர்களா?. அதற்கு குட்பை சொல்லி விடுங்கள். ஏனென்றால் தற்போது மெட்டா நிறுவனம், வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கேமரா மூலம் நேரடியாக ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நீங்கள் நேரடியாக ஆப் ஸ்டோருக்கு சென்று வாட்ஸ்அப்பை அப்டேட் செய்ய வேண்டும். அதன் பின் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுடைய கேமராவை பயன்படுத்தி ஒரு ஆவணத்தை ஸ்கேன் செய்யலாம்.
இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை குறித்து தற்போது காணலாம். முதலில் வாட்ஸ்அப்பில் ஆவண பிரிவு மெனுவை திறக்க வேண்டும். அதன் பின் கேமராவை செயல்படுத்த ஸ்கேன் பொத்தானை கிளிக் செய்யவும். ஆவணத்தை புகைப்படம் எடுக்க உங்கள் கேமராவை பயன்படுத்தவும். ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணத்தை மதிப்பாய்வு செய்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள். ஃபிரேமிங் மற்றும் தெளிவாக ஓரங்களை சரி செய்து ஸ்கேனிங்யை உறுதிப்படுத்தவும். இந்த ஆவணத்தை நேரடியாக சேட் பாக்ஸ் அல்லது குழுவிற்கு அனுப்பலாம்.