
ராஜஸ்தானில் பன்ஸ்வராவில் உள்ள பொது சுகாதாரப் பொறியியல் துறையில் அசோக் குமார் ஜாங்கிட் என்பவர் மேற்பார்வை இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினருக்கு புகார் வந்தது. அதன்படி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ஜெய்ப்பூர், கோட்புட்லி, உதப்பூர், அஜ்மீர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அவரது வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட 19 இடங்களில் சோதனை நடத்தினர்.
அதில் அவரது பெயரில் உள்ள 19 சொத்துக்கள், அவரது மனைவி, சுனிதா சர்மா பெயரில் 3 சொத்து மற்றும் மகன் நிகில் ஜாங்கிட் பெயரில் 32 சொத்துக்கள் இருப்பது தெரியவந்தது. மொத்தத்தில் அவர் ரூ. 11. 5 கோடிக்கும் மேல் சொத்துக்களை வைத்துள்ளது தெரியவந்தது. இதில் அவரது சட்டபூர்வ வருமானத்தை விட சுமார் 161% அதிகம் என்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.