
சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் டில்லி குமார் (60) மற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (34) ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்நாடு அரசு துறைகளான இந்து அறநிலையத்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் வேலை பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்கள் சிலரை ஏமாற்றி உள்ளனர்.மேலும் வேலை வாங்கித் தருவதற்கு ரூபாய் 62.80 லட்சம் பணத்தையும் பெற்றுள்ளனர்.
இதனை அடுத்து வேலைக்கான பணி நியமன ஆணை எனக் கூறி போலியான நியமன ஆணைகளை தயாரித்து ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு, வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு காவல்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டில்லி குமார் மற்றும் மகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.