
இன்றைய காலத்தில் செல்போன் அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது. இதன் முலம் பலர் சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் மூழ்கிவிட்டனர். அதேபோன்று தற்போது சீனாவில் கடந்த புதன்கிழமை அன்று தனது வீட்டின் முன்பு ஓடும் ஆற்றில் தனது பொம்மையை கழுவ செல்லலாமா என்று தனது தாத்தாவிடம் 3 வயது குழந்தை கேட்டுள்ளார். ஆனால் அவர் செல்போனில் சமூக ஊடகத்தில் மூழ்கி இருந்ததால், தனது பேரன் சொன்னதை கவனிக்கவில்லை.
அந்தக் குழந்தை தனது பொம்மையை கழுவ ஆற்றின் அருகே சென்றுள்ளார். அப்போது அந்த குழந்தை ஆற்றுக்குள் தவறி விழுந்தான். அப்போது கூட அந்த முதியவர் பிள்ளையை கவனிக்கவில்லை. பின்னர் குழந்தை சடலமாக மீட்கப்பட்டான். இது தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் “என் குழந்தையின் கடைசி வீடியோ இதுதான்” என்று அவரது தாய் கண்ணீர் வடித்தார்.