கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் சிவராமன் என்பவரை கைது செய்தனர். போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது சிவராமன் தற்கொலை செய்து உயிரிழந்தார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் கருணைத்தொகை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட 23 மாணவிகளின் இரண்டு பேருக்கு தலா 5 லட்ச ரூபாயும், மற்றவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த தொகையை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியிடமே வசூலிக்கவும் அனுமதி கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டு 219 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ஒரு சில வாரங்களில் இதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்படும்.