
பிரபல நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த 24-ஆம் தேதி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். அஜித்தின் தந்தை உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய்யும் அஜித்தின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு நேரில் செல்ல முடியாத சில பிரபலங்கள் வலைதளத்தில் தங்கள் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் என்று நடிகர் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் அஜித்தின் வீட்டிற்கு முன்பாக சூர்யா மற்றும் கார்த்தியின் கார் வரும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
Exclusive | Now : Our @Karthi_Offl Anna & @Suriya_Offl Anna At #Ajith Sir Home For expressing their sincere condolences to Ajith Sir & His Family.#Karthi #Japan #Suriya pic.twitter.com/PPK5P0kXU6
— Karthi Fans Club (@Karthi_AIFC) March 27, 2023