உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு தனியார் பள்ளியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுவிழாவினை கொண்டாடினர். அந்த விழாவின் போது திடீரென ஒரு மாணவர் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார்.

அதன்பிறகு சில மாணவர்கள் கார்களில் வரிசையாக சென்று ஸ்டண்ட் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட கார்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.