
துருவ நட்சத்திரம் படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை கவுதம் வாசுதேவ் மேனன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கென தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவரது விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல திரைப்படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் திரையரங்கிற்கு மீண்டும் மீண்டும் சென்று பார்க்கக்கூடிய ரசிகர் கூட்டம் இன்றளவும் காணப்படுகிறது. இந்நிலையில் சியான் விக்ரம் அவர்களை வைத்து இயக்கிய துருவ நட்சத்திரம் நவம்பர் 24ல் வெளியாகும் நிலையில், படம் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில்,
சியான் விக்ரம் அவர்கள் துருவ நட்சத்திரம் படத்தை பார்த்து விட்டதாகவும், அது அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் படத்திற்கான டப்பிங் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. படத்திற்கான க்ளைமாக்ஸ் OPEN ENDED க்ளைமேக்ஸ் ஆக இருக்கும் அதாவது, படத்தின் முடிவு ரசிகர்கள் கையில் விடப்பட்டிருக்கும். அது என்னவாக இருக்கும் என்பதை அவர்களே யூகித்துக் கொள்ளலாம்.
அது பார்ட் 2 படத்திற்கான லீடாக கூட அமையலாம். இதன் மூலம் தனி யுனிவர்ஸ் ஒன்றை நான் உருவாக்க விரும்புகிறேன். பார்ட் 1 பார்த்துவிட்டு ரசிகர்கள் ஆதரவு நிலைப்பாடு என்ன என்பதை அறிந்த பின்பு அதை உருவாக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஜெயிலர் திரைப்பட வில்லன் விநாயகம் இப்படத்தில் மிரட்டலான வில்லனாக இடம்பெற்றுள்ளார் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே LCU ன் மோகம் கோலிவுட்-ஐ கட்டி போட்டிருக்கும் சூழ்நிலையில், அடுத்ததாக GVM யூனிவர்சாக GCU உருவானால் நன்றாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.