வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்தார். இந்த நிலையில் வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது நடைபெற்ற கொலை குறித்து ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஷேக் ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்புமாறு  கோரிக்கை ஒன்றை வங்கதேசம் விடுத்துள்ளது. ஷேக் ஹசீனா இந்தியாவில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளார். தற்போது அமைந்துள்ள யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து திருப்பி அனுப்ப வலியுறுத்தி வருகிறது. அவரிடம் கொலை குறித்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.