
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக மெட்டா நிறுவனம் whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி தற்போது ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும். இது whatsapp அப்டேட் மூலமாக விரைவில் வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவர்களுக்கும் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதி கிடைக்கும்.
இந்நிலையில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸ் 30 நொடிகள் மட்டுமே வைக்க முடியும். செல்போனில் வாட்ஸ் அப் செயலியை ஓபன் செய்த பிறகு ஸ்டேட்டஸ் டேப் என்ற ஆப்ஷனை திறக்க வேண்டும். அதன் பக்கத்தில் பென்சில் போன்ற ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்த பிறகு வாய்ஸ் மெசேஜ் பதிவிட வேண்டும். மைக்ரோபோன் ஐகானை தட்டினால் உங்களுடைய வாய்ஸ் மெசேஜ் ரெகார்ட் ஆகும். அதில் 30 நொடிகள் வரை நீங்கள் வாய்ஸ் ரெக்கார்டு செய்யலாம். நீங்கள் ரெக்கார்ட் செய்த பிறகு உங்கள் விரலை எடுத்தால் நீங்கள் ரெகார்ட் செய்ததை கேட்க முடியும். மேலும் அதன் பிறகு Send என்ற ஐகானை கிளிக் செய்தால் உங்களுடைய வாய்ஸ் மெசேஜ் ஸ்டேட்டஸ் காட்டும்.