தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறது. முதலில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப் படுத்தப்பட்ட நிலையில் தற்போது அங்கு 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க தற்போது விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ஆர்வி அசோசியேட் நிறுவனத்திற்கு 1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 3.5 கோடி ரூபாய் வரை டெண்டர் கோரப்பட்ட நிலையில், ஆர்.வி அசோசியேட் நிறுவனம் 1.35 கோடிக்கு டெண்டர் கோரியது. மேலும் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 20 ரயில்வே நிலையங்களுடன் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட இருக்கிறது.