
தந்தை வாங்கிய கடனுக்காக கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 4 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் மணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரது 19 வயது மகளை கந்து வட்டி கும்பல் கடத்தி சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. கந்து வட்டிக்கு கடன் கொடுத்த மணியின் தூண்டுதலின் பெயரில் பழனி, நவநீதன், சுரேஷ், ஹரி ஆகியோர் தன்னை காரில் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்ததாக தேனி எஸ் பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
எட்டு மாதங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதாக புகாரில் இளம்பெண் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணி உட்பட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.