
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது ஜூலை 13 சனிக்கிழமை அன்று பல மணி நேரங்களுக்கு வங்கியின் பல சேவைகள் மூடப்படும் என தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் செய்தி மூலமாக ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
HDFC வங்கி தனது அமைப்பை மேம்படுத்தப் போகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் 13 நேரம் சிரமத்தை சந்திக்க நேரிடும். வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் அனைத்து வேலைகளையும் முன்கூட்டியே செய்ய வேண்டும் எனவும் இதனால் அவர்கள் பின்னர் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என தெரிவித்துள்ளது.