
HDFC வங்கி சேவைகள் மீண்டும் தடைப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஜூன் 9 மற்றும் ஜூன் 16 ஆகிய தேதிகளில் காலை 3.30 மணி முதல் காலை 7.30 மணி வரை தொடர்ந்து நான்கு மணி நேரம் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் நிறுத்தப்படும் என்று எச் டி எப் சி வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சிஸ்டம் புதுப்பித்தலின் ஒரு பகுதியாக இந்த செயலிழப்பு ஏற்படுகின்றது. இருந்தாலும் சேவைகளில் அடிக்கடி தடங்கள் ஏற்படுவதால் பயனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.