
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சசி என்ற பெண் தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தனது 3 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்பு அதே ஊரைச் சேர்ந்த பவன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சசியின் 3 குழந்தைகளான உதயகுமார், ராகுல், ரேணுகா ஆகியோரை பவன் தனது செல்போன் சார்ஜர் ஒயரை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் அலறிய குழந்தைகளின் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பவன் தாக்குதலில் ஈடுபட்டதை பார்த்ததோடு, உடனடியாக குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில நாட்களாகவே பவன் எங்களை கடுமையாக தாக்கி, காயத்தின் மீது மிளகாய் தூளை கொட்டுகிறார். இதில் நாங்கள் அலறி துடிப்பதை அவர் வேடிக்கையாக பார்க்கிறார். எங்களது தாயும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றார்.
சில நேரங்களில் நாங்கள் சாப்பிடும் உணவில் மிளகாய் தூளை கலந்து எங்களை சாப்பிடுமாறு வற்புறுத்திக்கிறார். அதை நாங்கள் சாப்பிட மறுத்தால் கையில் கிடைப்பதை எடுத்து சரமாரியாக தாக்குகிறார் என்று கூறினர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.