
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு சென்றுள்ளார். அங்கு கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் வைக்க உள்ளார்.
இது குறித்து தற்போது எம்பி வெங்கடேசன் ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார். அதில் அன்று எதிர்கட்சித் தலைவராக பார்வையிட வந்தார். இன்று முதலமைச்சராக அருங்காட்சியகத்தை திறந்து வைக்க வருகிறார். எதுவும் இல்லை என சொன்ன ஒன்றிய அரசு எதுவெல்லாம் இருக்கிறது பார் எனும் தமிழக அரசு என்று பதிவிட்டுள்ளார்.
அன்று எதிர்கட்சித்தலைவராக கீழடியை பார்வையிட வந்தார்.
இன்று முதலமைச்சராக கீழடி அருங்காட்சியகத்தை திறந்துவைக்க வருகிறார்.
எதுவும் இல்லையெனச்சொல்லி வெளியேறியது
ஒன்றிய அரசியல்.“எதுவெல்லாம் இருக்கிறது பார்…” என உலகிற்கே காட்சிப்படுத்துவது தமிழ்நாட்டு அரசியல்.
முதல்வரே வருக வருக pic.twitter.com/oDzsnRf9eZ
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 5, 2023