
இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்துபவர்கள் பட்டியலை பார்ச்சூன் இதழ் வெளியீட்டுள்ள நிலையில் பாலிவுட் பிரபலங்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். குறிப்பாக நடிகர் ஷாருகான் 2024 ஆம் ஆண்டில் 92 கோடி வருமான வரியாக செலுத்தி அதிக வருமான வரி செலுத்தும் பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்திலும் நடிகர் விஜய் 80 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தி பட்டியலில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள். இந்நிலையில் அதிக வருமான வரி செலுத்தும் கிரிக்கெட் பிரபலங்களில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார்.
அதன்படி இவர் 66 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்தியுள்ளார். அதன் பிறகு இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் எம்.எஸ் தோனி இருக்கிறார். இவர் 38 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தி கிரிக்கெட் பிரபலங்களில் அதிக வருமான வரி செலுத்தும் 2-ம் வீரராக திகழ்கிறார். மேலும் நடிகர்கள் அமிதாபச்சன் 71 கோடி ரூபாயும், நடிகர் சல்மான் கான் 75 கோடி, நடிகர் அஜய் தேவகன் 42 கோடி, நடிகர் ரன்பீர் கபூர் 36 கோடி ரூபாயும், நடிகர் ஹிருத்திக் ரோஷன் 28 கோடி ரூபாயும் வருமான வரியாக செலுத்துகிறார்கள். மேலும் கபில் ஷர்மா 26 கோடி ரூபாய் வருமான வரியும், சச்சின் டெண்டுல்கர் 28 கோடி ரூபாயும், சௌரவ் கங்குலி 23 கோடி ரூபாயும், ரிஷப் பண்ட் 10 கோடி ரூபாயும் வருமான வரியாக செலுத்தியுள்ளனர்.