விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் பகுதியில் கங்காபுரம் கிராமத்தில் வரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(30)என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சின்ன குட்டி என்பவரின் மகன் ரங்கநாதனுக்கும், மோகன்ராஜ்க்கும் விவசாய நிலத்தின் வரப்பு தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக மோகன்ராஜ் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்து விட்டு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பே திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அலுவலர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மோகன்ராஜின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மோகன் ராஜின் இறப்பிற்கு காரணமான ரங்கநாதன், ஹரிகுமார், கோதண்டம், செல்வராஜ், ஏழுமலை உட்பட 19 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.