
செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலில் ஜெயக்குமார் சொன்னார். பிறகு எடப்பாடி பழனிசாமி நடுவுல பேசாதீங்க என சொல்லிட்டார். இது என்னங்க ? எதாவது புரியுதா உங்களுக்கு? அப்போ ஜெயக்குமார் இனிமேல் எந்த முகத்தை வைத்து ப்ரஸ் மீட் பண்ணுவார். ஒரு முக்கியமான ஆளுல கட்சியில…..
முக்கியமான பொறுப்புல இருக்குறவரை இவ்ளோ கேவல படுத்துற பழனிசாமி, நாளைக்கு காலைல பாரதிய ஜனதா சொல்லும்…. இன்னொரு ஸ்டேட்மென்ட் வருது…. அவர் சொல்லுவார்… நடந்ததை நாங்கள் விட்டுடுறோம். இனிமேல் நாங்களும் தப்பா பேச மாட்டோம் என்று… நீங்களும் தப்பா பேச மாட்டீங்க. அப்ப அம்மா பத்தி பேசுறது…. அம்மா பத்தி என்னா பேசிருக்காரு அண்ணாமலை ?
புரட்சித்தலைவி ஜெயலலிதா என்ற ஆளுமையை விட எனது தாய் நூறு மடங்கு உயர்ந்தவர். எனது மனைவி ஆயிரம் மடங்கு உயர்ந்தவர். அண்ணா மதுரையில் பதுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வைத்திருந்தார். தெய்வீகமும், தேசியமும் எனது கண்கள் என்று சொன்ன பசும்பொன் அய்யா அவரை விரட்டி அடித்தார், மன்னிப்பு கேட்டார். உடுறான் கதையை… அவன் சவுரியத்துக்கு…. அதுலாம் ஒண்ணுமே நடந்தது கிடையாது.
அவன் எங்கையாது 2 ஜாதிய தூண்டி விட்டு, சண்டை பண்ணிக்கிறதுக்காக இப்படி பேசுறாரு. இந்த பொழப்பே இதான். இது எவன் சொல்லி கொடுக்கிறான் தெரில. அந்த முட்டா பைய வந்தா நான் சொல்லிடுவேன். மதுரையில நடந்த பொது கூட்டத்துல…. 2 மணி நேரம் பேசுன பேரறிஞர் அண்ணா…. கருத்து வேறுபாடுகளுக்கு எதிரில் கடைசி வரைக்கும் தேவர் ஐயாவை பத்தி பேசவே இல்லை. அவர் சரித்திரம் தெரியாது .எவனோ முட்டா பய சொல்லிட்டு இருக்கான் என அண்ணாமலையை கடுமையாக சீண்டினார்.