
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் திற்பரப்பு பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பெரும்ஏலா பகுதியில் இருந்த வாழைத்தோட்டத்தில் சுமார் 100 வாழைகள் சாய்ந்தது. நேற்று பிற்பகலில் பெருஞ்சாணி, பேச்சுபாறை, களியல், குலசேகரம், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.