ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் வனவிலங்குகள் அடிக்கடி சாலைக்கு வந்து செல்கிறது. நேற்று காட்டை விட்டு வெளியேறிய ஒரு யானை பண்ணாரி சோதனை சாவடி அருகே வந்தது.
இதனையடுத்து அந்த யானை வனவியல் பூங்கா அமைந்துள்ள இடத்தில் நடுரோட்டில் நின்றதால் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனையடுத்து தானாக யானை காட்டுக்குள் சென்றது. பின்னர் 20 நிமிடம் தாமதமாக வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.