திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுப்பாரெட்டி பாளையம், விச்சூர், நாப்பாளையம், வெள்ளிவாயல், பெரிய முல்லைவாயல் உள்ளிட்ட கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததால் 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.

மழை நின்று மூன்று நாட்களுக்கு மேலாகியும் திருவள்ளூர் அருகே இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ள நீர் வடியவில்லை. வெள்ளநீர் சூழ்ந்திருபதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே துரிதமாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.