
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்றைக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் ஏராளமான பொருட்களை தயாரித்து வருகின்றீர்கள்.
நான் பல மாவட்டங்களுக்கு….. எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் ஆய்வுக்கு சென்றபோதும், அங்கு இருக்க கூடிய கலெக்டர் ஆபீஸ் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நீங்கள் அமைக்கின்ற அந்த அரங்குகளுக்கு வந்து, நீங்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை எல்லாம் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றேன்…
அரசு நிகழ்ச்சியில் மட்டுமல்ல, எங்களுடைய கட்சி நிகழ்ச்சிகளிலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய அரங்குகளை நாங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். சமீபத்தில் சட்டமன்றத்திலும் பேசினேன்….. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் நான் வேண்டுகோள் வைத்தேன்…
இனி யார், எந்த பிறந்த நாளாக இருக்கட்டும்….. எந்த ஒரு நல்ல நாளாக இருக்கட்டும்.. பரிசுகள் கொடுக்கும் பொழுது அவர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் வைத்தேன்…. சட்டமன்றத்தில் என்னுடைய உரையிலே இருந்தது…. அனைவருக்கும் பரிசுகள் கொடுக்கும் பொழுது…. மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்த பொருட்கள் தரமான பொருட்களாக இருக்கின்றது… அவர்களுக்கு உதவுகின்ற வகையில் ஒவ்வொருத்தர் இந்த பொருட்களை வாங்கி, பரிசு கொடுங்கள் என்று சட்டமன்றத்தில் பேசி இருந்தேன் என தெரிவித்தார்.