
புதுச்சேரியில் உள்ள திருமலையராயன் பட்டினத்தில் வீதி வரதராஜா பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவின்போது இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. அந்த இசை கச்சேரியில் பக்தி பாடல்களைத் தவிர சினிமா பாடல்கள் அதிகமாக பாடப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோயில் வளாகத்திற்குள் இசை கச்சேரிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்றும், சினிமா பாடல்கள் பாட அனுமதி கிடையாது என்றும் உத்தரவிட்டார்.