
திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் எழிலன், திமுக நீட்டுக்காக என்ன பண்ணுச்சு என்று கேட்கிறார்கள் ? நான் திருப்பி கேட்கிறேன்.. கூட்டணி கட்சிகள் அப்படின்னு சொல்றனே… கூட்டணி கட்சி தர்மங்கள் பத்தி உங்களுக்கு தெரியுமா ? கூட்டணி கட்சி உடைய நோக்கம் என்ன ? ஒன்றிய அரசுல… மத்தியில இருக்கிற ஒரு தேசிய கட்சி கூட்டணியில் மாநில கட்சி இருந்துச்சுன்னா…
மாநில கட்சியின் உரிமைகள் பறிக்கப்படும் போது அந்த தேசிய கட்சியிடம் பேசி சண்டை செய்து, மாநில உரிமையை பாதுகாப்பது தான் கூட்டணி கட்சியின் தர்மம். அந்த தர்மத்தை காப்பாற்றியவர் முத்தமிழ் கலைஞர். ஏன் என்றால் ? 2010-இல் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா ஒரு நோட்டிபிகேஷன் விட்டாங்க… அப்போது காங்கிரஸ் அரசாங்கம்.
என்ன நோட்டிபிகேஷன் விட்டாங்க ? இப்ப சொல்றாங்களே… சிலர் நீட்டுக்கு ஆதரவாக பேசி… காங்கிரஸ் ஆட்சி காலத்துல நீட் வந்தது, என்று.. அது தப்பு. முழுமையான தப்பு. அது பொய். காங்கிரஸ் ஆட்சி காலத்துல வந்து காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாம்.
அதாவது எந்தெந்த மாநிலங்களுக்கு தேர்வு விருப்பம் இருக்கோ…. அவர்கள் அந்தத் தேர்வை எடுத்துக்கலாம். ஆப்ஷனல். அது நீட் கிடையாது, அது ஒரு காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாம். ஏன் கொண்டு வந்தாங்க ? ஒரே தேர்வு வழியாக போலாம். எந்தெந்த மாநிலம் விருப்பம் இருக்கோ அந்த மாநிலம் எடுத்துக்கலாம் என்று சொன்னது தான் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நோட்டிபிகேஷன்.
அதற்க்கே எதிர்ப்பு தெரிவித்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர். கடிதம் எழுதினார். அப்போ மனித வளத்துறை அமைச்சராக இருந்த கபில் சிபிலுக்கு கடிதம் எழுதினார். சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். நீங்கள் காமன் என்டரன்ஸ் டெஸ்ட் என்ன வேணும்னாலும் வச்சுக்கோங்க.. உங்களின் எந்த வகையான என்ட்ரன்ஸ் எக்ஸாமும் எங்களுக்கு நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் இருக்கறதுனால… அது செல்லாது என்று கடிதம் எழுதியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என தெரிவித்தார்.