பாராளுமன்றத்தில் சமீபத்தில் வங்கி சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதாவால் வங்கிகளின் செயல்பாடுகள் சுதந்திரமானதாகவும் ஒழுங்கு முறையுடையதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த மசோதாவின் படி ஒரு வங்கி கணக்கில் நான்கு நியமனதாரர்களை அதாவது நாமினிகளை சேர்த்துக் கொள்ளலாம். இந்த நாமினைகளை ஒரே நேரத்திலும் நியமிக்கலாம். அல்லது குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

முதல் நாமினியாக சேர்க்கப்படுபவர்களுக்கு பணத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டால் இரண்டாவதாக நாமினியாக நியமிக்கப்பட்டவருக்கு அந்த பணம் வழங்கப்படும்.

இதுவே ஒரே நேரத்தில் நான்கு நாமினிகள் இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் பணத்தை பிரித்து ஒவ்வொரு நாமினிகளுக்கும் வழங்கப்படும். வங்கி கணக்கிற்கு சொந்தக்காரர் பணத்தைப் பிரிக்க வேண்டிய விகிதத்தை தொடக்கத்திலேயே தெளிவாக குறிப்பிட வேண்டும்.