தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என்ற ஹிந்தி பெயரை இனி குறிப்பிட வேண்டும் என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பால் கூட்டுறவு சங்கங்களுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது தயிர் பாக்கெட்டுகள் மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆவின் தயிரில் தாஹி என்ற ஹிந்தி பெயரை வைக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்துவதை தமிழக அரசு ஏற்கக் கூடாது. மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் விதித்த கட்டுப்பாட்டை தமிழகத்தில் ஏற்க முடியாது. ஹிந்தியை தமிழர்களிடம் திணிப்பதில் இது ஒரு புதிய யுத்தி. இது ஒரு திட்டமிட்ட ஹிந்தி திணிப்பு என்று கூறியுள்ளார்.