
பாகிஸ்தானில் உள்ள பரபரப்பான சாலையில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி பிரபல தொழிலதிபரான டேனிஷ் இக்பாலின் மனைவி நடாஷா டேனிஷ் தனது காரில் வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த 2 பேரை அவரது கார் மோதி நசுக்கியது. இதில் தந்தை மற்றும் அவரது மகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அப்போது நட்டாஷா டேனிஷ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்ந்து நடாஷா அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அப்போது அவரது கார் பல வாகனங்கள் மீது மோதியது. இதனால் மேலும் 4 பேர் காயமடைந்தனர். இதில் ஒருவர் வெண்டிலேட்டரில் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நடாஷாவை அக்கம் பக்கத்தினர் சூழ்ந்தனர்.
அவரிடம் பொதுமக்கள் கோபமாக கேள்வி எழுப்பியபோது, நடாஷா சிரித்துக்கொண்டே “என் தந்தை யார் என்று உனக்குத் தெரியுமா” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடாஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார் படுத்த உள்ளனர்.
ஆனால் இந்த சம்பவத்தால் நடாஷாவின் மனநிலை காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக நடாஷாவின் வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் மருத்துவமனை பதிவுகள், நடாஷாவின் வழக்கறிஞரின் கூற்றுக்கு முரணாக உள்ளது. நடாஷா நலமாக டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
View this post on Instagram
“>
View this post on Instagram
“>