
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் சாலியர் தெரு குருநாதர் கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் படி விரைந்து சென்ற நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா, வினோத் சாந்தாராம் மற்றும் காவல் துறையினர் அங்கு சென்று புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் உடலைத் தோண்ட ஏற்பாடு செய்தனர்.
இச்சம்பவம் நேற்று நள்ளிரவில் நடைபெற்றுள்ளதாகவும், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் சிவா, விஷால் என்ற இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இக்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.