
நடிகர் ராஷ்மிகா மந்தனா திரை உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தற்போது அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான சிக்கந்தர் படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை அடுத்து தனுஷுக்கு ஜோடியாக குபேரா படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் ராஷ்மிகா மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
View this post on Instagram
Maddock Films என்ற நிறுவனத்தின் 20 ஆம் ஆண்டு விழா தான் அது. நடிகை ராஷ்மிகா மிகவும் கவர்ச்சியான உடையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கே நின்று கொண்டிருந்தபோது இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அங்கு வந்துள்ளார். அப்போது அவர் ஓடி சென்ற நிலையில் ரஷ்மிகா நிறுத்தியுள்ளார். அவர் போகிற வேகத்திலேயே கையை மட்டும் கொடுத்துவிட்டு வேகமாக சென்றுள்ளார் . இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.