அமெரிக்காவில் உணவக ஊழியரின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட டெலிவரி டிரைவருக்கு ரூ 431 கோடி இழப்பீடு வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது வாஷிங்டன் பகுதியில் மைக்கேல் என்பவர் டெலிவரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்டார் பக்ஸ் உணவகத்தில் டி பார்சல்களை வாங்கினார். அப்போது அவருக்கு உணவக ஊழியர் ஜன்னல் வழியாக சூடான டீ கப் பார்சலை காரில் இருந்த மைக்கேலிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அந்த டீ கப் சரியாக மூடாமல் இருந்ததால் அதிலிருந்து தேநீர் மைக்கேல் மீது கொட்டியது. இதனால் மைக்கேல் வலி தாங்க முடியாமல் கதறினார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மடியில் கொட்டிய தேநீரால் ஏற்பட்ட பலத்த காயங்களால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தது. அப்போது மருத்துவர்கள் அவருக்கு தொடை மற்றும் ஆணுறுப்பில் ஏற்பட்ட காயத்தால் நிரந்தரமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து மைக்கேல் தனக்கு நேர்ந்த பாதிப்பிற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதி உணவக ஊழியரின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட மனுதாரர் மைக்கேல் கார்ஸியாவிற்கு இழப்பீடாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 50 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.431 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.